தவறான செய்தியை பரப்பிய ஊடகங்கள்; கண்டனம் தெரிவித்து பிரேமலதா ஆவேசம்!

தேமுதிக தலைவர் விஜயகாந்த், இன்று தனது 71-ஆவது பிறந்த நாளை இன்று கொண்டாடி வருகிறார். அதையொட்டி, கோயம்பேட்டில் உள்ள கட்சி அலுவலகத்துக்கு வெள்ளிக்கிழமை காலை 10.30 மணியளவில் வருகை தந்தார். அங்கு கட்சி நிர்வாகிகளையும் தொண்டர்களையும் சந்தித்து மகிழ்ந்தார்.

இந்நிகழ்ச்சியில் பிரேமலதா பேசியதாவது:

ஒரு வாரத்துக்கு முன்பு தேமுதிக நிறுவனர் விஜயகாந்த் பற்றி தவறான செய்தி வெளியிட்ட அனைத்து ஊடகங்களும் கண்டனம் தெரிவிக்கின்றேன்.

உண்மைக்கு புறம்பாக அவர் உடல்நிலை சரியில்லை என்று வெளியிட்டவர்களுக்கு தேமுதிக சார்பில் கண்டனம் தெரிவித்துக்கொள்கிறேன்.

தயவு செய்து மீடியா மற்றும் யூடியூப் சேனலை சேர்ந்தவர்களுக்கு பணியுடன் கேட்டுக்கொள்கிறேன் தலைவரை பற்றி தவறாக யாரும் எழுத வேண்டாம்.

கடைக் கோடியில் இருக்கும் எங்கள் தொண்டர்கள் கஷ்ட படுறாங்க. கேப்டன் தொடங்கி கட்சி நல்ல ஒரு லட்சியம் வெல்வது நிச்சயம்.

ஆயிரம் பேர் ஆயிரம் வதந்திகளை சென்னாலும் நீங்கள் யாரும் கவலைப்படாதீங்க தலைவர் சூப்பரா இருக்காரு, வராரு.. வராரு.. அழகர் வராரு என்ற பாடல் போட்டவுடன் தலைவர் டான்ஸ் ஆடுறாரு உங்களை பார்த்தது தலைவருக்கு சந்தேஷம் தான் என்றார்.

உண்மை தொண்டர்கள் வாழ்த்து விஜயகாந்தை நூறாண்டு வாழ வைக்கும்.

கேப்டன் கேப்டனுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள் என்று தொண்டர்கள் கோஷமிட்டனர்.

தொண்டர்களின் வாழ்த்து இருக்கும் வரை விஜயகாந்த் 100 வயசு வரைக்கும் இருப்பார்.

நமது முரசு நாளை தமிழக அரசு என்று பிரேமலதா கோஷமிட்டார்.

பின்னர் விஜயகாந்த் சார்பில் அவரது பிறந்தநாளை முன்னிட்டு, ஏழைகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.

RELATED ARTICLES

Recent News