Connect with us

Raj News Tamil

தனுஷ் – மீனா மறுமணம்? பற்றி எரியும் இணையம்! என்ன நடந்தது?

சினிமா

தனுஷ் – மீனா மறுமணம்? பற்றி எரியும் இணையம்! என்ன நடந்தது?

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகைகளில் ஒருவராக இருந்தவர் மீனா. இவருடைய கணவர் வித்யாசாகர் மறைவிற்கு பிறகு, தனது மகள் நைனிகாவுடன் வாழ்ந்து வருகிறார்.

இதேபோல், நடிகர் தனுஷ்-ம், ஐஸ்வர்யா ரஜினிகாந்துடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டு காரணமாக, பிரிந்து வாழ்ந்து வருகிறார்.

இந்நிலையில், இந்த இரண்டு பேரும், திருமணம் செய்துக் கொள்ள இருப்பதாக, நடிகரும், பத்திரிகையாளருமான பயில்வான் ரங்கநாதன் கூறியுள்ளார். மேலும், வரும் ஜூலை மாதம் தான், இவர்களது திருமணம் நடக்க இருப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.

அடிப்படை ஆதாரம் எதுவும் இல்லாமல் இவர் வெளியிட்டுள்ள தகவல், இணையத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மறுமணம் செய்துக் கொள்ள விருப்பம் இல்லை என்று மீனா சொன்ன பிறகும், இதுபோன்ற அவதூறு பரப்புவது கண்டிக்கத்தக்கது என்றும் அவரது ரசிகர்கள் கூறி வருகின்றனர். தனுஷின் ரசிகர்களும், இதற்கு தங்களது எதிர்ப்புகளை கூறி வருகின்றனர்.

More in சினிமா

To Top