மீனா மறுமணம் செய்வது உறுதியா?

பிரபல நடிகை மீனாவின் கணவர் வித்யாசாகர், உடல்நலக்குறைவு காரணமாக, சமீபத்தில் உயிரிழந்தார். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், அவருக்கு பலரும் இரங்கல்களை தெரிவித்து வந்தனர்.

இந்நிலையில், நடிகை மீனா மறுமணம் செய்ய இருப்பதாக, சமூக வலைதளங்களில் செய்திகள் பரவி வருகிறது. பெற்றோரின் கட்டாயத்தின் பேரில், அவர் இரண்டாவது திருமணம் செய்ய உள்ளார் என்றும் கூறப்பட்டது.

ஆனால், இதுகுறித்து விசாரித்தபோது, அந்த தகவல் அனைத்தும் வதந்தி என்பது தற்போது தெரியவந்துள்ளது.