உத்தரப் பிரதேச மாநிலம் மீரட் அருகே அகமதுநகர் பகுதியில் வசிக்கும் பெண் ஒருவருக்கு 12 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்துள்ளது. அந்த பெண்ணின் கணவருக்கு மது மற்றும் சூதாட்டம் பழக்கம் இருந்துள்ளது.
இந்நிலையில் தனது மனைவியை பணையம் வைத்து நண்பர்களுடன் சூதாட்டம் ஆடியுள்ளார். இதில் தோல்வி அடைந்த அவர் சொன்னப்படியே தன்னுடைய மனைவியை அனுப்பி வைப்பதாக தனது நண்பருக்கு வாக்கு கொடுத்துள்ளார்.
இதையடுத்து வீட்டிற்கு சென்ற அவர் தனது நண்பருடன் உறவு கொள்ளுமாறு மனைவியை வற்புறுத்தியுள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த மனைவி, தனது கணவருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். இதற்கு மறுப்பு தெரிவித்த மனைவியை கணவன் கடுமையாக தாக்கியுள்ளார்.
இதையடுத்து அந்த பெண் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். தனது கணவர் மீது அந்த பெண் கூறிய குற்றச்சாட்டுக்களை கேட்டு அதிர்ந்து போன போலீசார், பெண்ணின் கணவர் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
அவருடைய கணவர் மீதும் நண்பர் மீதும் நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்த காவல் துறையினர் அவர்களை தேடும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.