கன்னியாகுமரியில் இருந்து புதிய இஸ்ரோ தலைவர்! அரசியல் தலைவர்கள் வாழ்த்து!

கேரள மாநிலத்தை சேர்ந்த சோம்நாத் என்பவர், இந்திய விண்வெளி ஆய்வு மையத்தின் தலைவராக பதவி வகித்து வந்தார். இவரது பதவிக்காலம் முடிவடைந்திருப்பதால், புதிய தலைவரை, மத்திய அரசு தேர்வு செய்துள்ளது.

அதாவது, தமிழகத்தின் கன்னியகுமரி மாவட்டத்தை சேர்ந்த நாராயணன் என்பவர், தற்போது இஸ்ரோவின் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். அமைச்சரவையின் நியமனக்குழு ஆணையின்படி, வரும் ஜனவரி 14-ம் தேதி முதல், அவருக்கு பதவி வழங்கப்பட உள்ளது.

இந்த தகவலை அறிந்த பல்வேறு அரசியல் கட்சியனர், நாராயணனுக்கு தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். குறிப்பாக, தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், பாஜக மாநில தலைவர் என்று பல்வேறு தரப்பினர், தங்களது எக்ஸ் பக்கத்தில் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

RELATED ARTICLES

Recent News