மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி சித்தர் பீடத்தின் நிறுவனர் பங்காரு அடிகளார் இன்று காலமானார். அவருக்கு வயது 82.
கடந்த ஒரு வருடமாகவே உடல்நிலை சரியில்லாமல் சிகிச்சை பெற்று வந்து நிலையில், சில நாட்களாக வீட்டில் இருந்தபடியே சிகிச்சை பெற்று வந்ததாகக் கூறப்படுகிறது.
இந்நிலையில், மாரடைப்பு காரணமாக அவர் உயிரிழந்துள்ளாகத் தகவல்கள் வெளியாகியுள்ளது. இந்த தகவல் பக்தர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.