நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கான சம்பளம் உயர்வு! எவ்வளவு தெரியுமா?

மத்திய அரசு சார்பில், புதிய அறிவிப்பு ஒன்று வெளியாகியுள்ளது. அந்த அறிவிப்பில், நாடாளுமன்ற உறுப்பினர்களின் சம்பளம் உயர்த்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கான மாத ஊதியம் 1 லட்சத்து 24 ஆயிரம் ரூபாய் என்று நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. மேலும், தினசரி படி 2 ஆயிரம் ரூபாயில் இருந்து, 2 ஆயிரத்து 500 ரூபாயாகவும் உயர்த்தப்பட்டுள்ளது.

இதுமட்டுமின்றி, முன்னாள் எம்.பி-க்களுக்கு வழங்கப்படும் ஓய்வூதியம், 25 ஆயிரம் ரூபாயில் இருந்து 31 ஆயிரம் ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது. இந்த ஊதிய உயர்வு, 2023 ஏப்ரல் 1 முன்தேதியிட்டு, வழங்கப்படும் என்றும், மத்திய அரசு தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.

இதற்கு முன்னர், நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு, 1 லட்சம் ரூபாய் சம்பளம் வழங்கப்பட்டு வந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

RELATED ARTICLES

Recent News