எரித்திரியாவில் விசித்திர சட்டம்…! குஷியில் ஆண்கள்…!

எரித்திரியாவில் உள்ள ஒவ்வொரு ஆணும் இரண்டு பெண்களை திருமணம் செய்வது கட்டாயம் என அந்நாடு தெரிவித்துள்ளது.

இதற்கு காரணம், ஆப்ரிக்க நாடானா எரித்திரியாவில் மக்கள்தொகை சுமார் 40 லட்சமாக உள்ளது. 1998 முதல் 2000 வரை நடைபெற்ற போரில் சுமார் 1.5 லட்சம் எரித்திரிய வீரர்கள் கொல்லப்பட்டதாக கூறப்படுகிறது.

இந்த போரில் லட்சக்கணக்கான ஆண்கள் இறந்து போனதால் அங்கு ஆண்கள் எண்ணிக்கை வெகுவாக குறைந்து பெண்கள் எண்ணிக்கை மிக அதிகமாக உள்ளது.

பெண்களுக்கு திருமணம் செய்ய போதிய ஆண்கள் கிடைக்கவில்லை என்பதால், பல பெண்கள் திருமணம் ஆகாமல் போகும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

அந்நாட்டில் ஆண்கள் அனைவரும் இரண்டு பெண்களை கட்டாயத் திருமணம் செய்து கொள்ள வேண்டும் என 2016ஆம் ஆண்டில் சட்டம் இயற்றப்பட்டது. மேலும், திருமணம் செய்யாத ஆண்களும், திருமணத்தை எதிர்க்கும் முதல் மனைவியும் சிறை தண்டனைக்கு ஆளாவார்கள் என அந்நாட்டு அரசு உத்தரவில் கூறப்பட்டுள்ளது.

இது குறித்து எரித்ரியா நாட்டின் தகவல் தொடர்பு அமைச்சர் யேமானே கெப்ரேமஸ்கல் கூறுகையில், இப்படி ஒரு விசித்திர சட்டம் எங்கள் நாட்டில் இல்லை என கூறியுள்ளார்.