சேலம் மாவட்டம் எடப்பாடி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட இருப்பாளி கிராமம் குறுக்குபட்டியிலுள்ள 125-வது வாக்குச்சாவடி மையத்தில் வாக்களிக்கவுள்ள சுமார் 85 வயதான மனநலம் பாதிக்கப்பட்ட மாரிமுத்து என்பவரிடம் நேரடியாக வாக்கு பெற வந்த தேர்தல் அதிகாரிகளிடம் தனக்கு வாக்களிக்க தெரியாது என்றும் அதற்காக தனது மகனை வைத்து ஓட்டு போடச் செய்து கொள்ளுங்கள் என்றும் கூறியுள்ளார்.
இதனிடையே அவரது மகனிடம் தந்தையின மனநலம் பாதிக்கப்பட்டதற்கான சான்றிதழ்களை எடுத்து வரும்படி கூறிவிட்டு அவர் எடுத்து வருவதற்குள் தேர்தல் அதிகாரியே முதியவரிடம் கையொப்பம் பெற்று தானாகவே வாக்குப்பதிவு செய்து வாக்கு பெட்டியில் போட்டுக் கொண்டுள்ளார்.
இதனையறிந்த அவரது மகன் மற்றும் உறவினர்கள் தங்களுடைய அனுமதி பெறாமல் எதற்காக நீங்களே வாக்கு பதிவு செய்து கொண்டீர்கள்? யாருக்கு சாதகமாக செயல்படுகிறீர்கள்? என்ற குற்றச்சாட்டை முன்வைத்து கடுமையான வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.