வாட்ஸ்-அப்பில் வரும் புதிய அப்டேட்!

உலக அளவில் அதிக பயனாளர்களை கொண்ட செயலி என்றால், அது வாட்ஸ்-அப் தான். இந்த செயலி, ஒவ்வொரு முறையும், பல்வேறு அப்டேட்களுடன் வந்து, அதன் பயனாளர்களை உற்சாகப்படுத்தி வருகிறது. இவ்வாறு இருக்க, வாட்ஸ்-அப்பில் புதிய அப்டேட் கொண்டு வரப்பட்டுள்ளது.

அதாவது, இனிமேல், தங்களது இன்ஸ்டாகிராம் கணக்கை, வாட்ஸ்-அப் கணக்குகளில் இணைத்துக் கொள்ள முடியும். இதன்மூலம், ஒருவரது வாட்ஸ்-அப் எண்கள் இருந்தால் மட்டும், அவரது இன்ஸ்டாகிராம் கணக்கை தெரிந்துக் கொள்ள முடியும்.

மேலும், மெட்டாவின் மற்ற சமூக வலைதளமான, பேஸ்புக்கையும், வாட்ஸ்-அப்புடன் இணைக்கும் அப்டேட், எதிர்காலங்களில் வரும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

RELATED ARTICLES

Recent News