மெட்ரோ டிக்கெட்டை இனி வாட்ஸ் அப்பிலேயே எடுத்துக்கொள்ளலாம்..!

வாட்ஸ்அப் செயலியை கோடிக்கணக்கான மக்கள் பயன்படுத்தி வருகின்றனர். வாட்ஸ் அப்பில் மெசேஜ் புகைப்படங்கள், வீடியோக்கள் என பல வசதிகளை வழங்கி வருகிறது.

இனி வாட்ஸ் அப்பில் நீங்கள் மெட்ரோ டிக்கெட்டுகளை வாங்க அல்லது ரீசார்ஜ் செய்யக்கூடிய வசதியினை பெற்று பயனடையலாம். மெட்டாவுக்குச் சொந்தமான வாட்ஸ்அப் நிறுவனம் இப்போது பல்வேறு இந்திய நகரங்களின் மெட்ரோ ரயில் சேவை வழங்குநர்களுடன் கைகோர்த்துள்ளது. இதனால் வீட்டிலிருந்தபடியே வாட்ஸ்அப் சாட்போட் மூலம் மெட்ரோ வழங்கும் பல சேவைகளையும் பெற முடியும்.

இந்த வாட்ஸ்அப் சாட்போட் வசதிகள் பெங்களூர், மும்பை, ஹைதராபாத் மற்றும் புனே ஆகிய நகரங்களில் உள்ள மெட்ரோ பயணிகளுக்கு கிடைக்க பெறுகிறது. இந்த சேவையைப் பயன்படுத்தி, மக்கள் தங்கள் மெட்ரோ டிக்கெட்டுகளை முன்பதிவு செய்யலாம். மேலும் பயணிகள் டிக்கெட்டுகளை புக் செய்வது, வாங்குவது, ரத்து செய்வது அல்லது டாப்-அப் செய்வது, ரயில் நேர அட்டவணை, வழித்தட வரைபடம், கட்டணம் போன்ற பல முக்கியமான தகவல்களைப் பெறலாம்.

RELATED ARTICLES

Recent News