மேட்டூர் அணை நீர்மட்டம் 100 அடியை எட்டியது!

மேட்டூர் அணை வரலாற்றில் 71-வது முறையாக அணையின் நீர்மட்டம் 100 அடியை எட்டி சாதனை படைத்துள்ளது.

காவிரி டெல்டா பாசனத்தின் ஜீவநாடியாக திகழும் மேட்டூர் அணை 1934-ம் ஆண்டு கட்டப்பட்டது. அணையின் 90 ஆண்டு கால வரலாற்றில் 71-வது முறையாக மேட்டூர் அணையின் நீர்மட்டம் 100 அடியை எட்டி சாதனை படைத்துள்ளது.

இன்று காலை 9.15 மணிக்கு 100 அடியை எட்டியதைத் தொடர்ந்து மேட்டூர் அணையின் வலது கரையில் உள்ள 16 கண் மதகை தண்ணீர் எட்டியது.

மேட்டூர் அணையின் நீர்மட்டம் தற்போது 100 அடியை எட்டியுள்ளது. அணைக்கு 93 ஆயிரத்து 828 கன அடியாக உள்ளது. இதே அளவு நீர்வரத்து நீடித்தால் மேட்டூர் அணை அதன் முழு கொள்ளளவான 120 அடியை ஒரு வாரத்தில் எட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த ஜூலை 16-ம் 43 அடியாக இருந்த மேட்டூர் அணையின் நீர்மட்டம் 11 நாட்களில் 57 அடி உயர்ந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

RELATED ARTICLES

Recent News