இஸ்ரேல் மீது இஸ்புல்லா தீவிரவாதிகளும், ஹமாஸ் தீவிரவாதிகளும், கடும் தாக்குதலை கடந்த ஞாயிற்றுக்கிழமை அன்று நிகழ்த்தினார்கள்.
இந்த சம்பவத்தில், இருதரப்பிலும் 1600-க்கும் மேற்பட்ட உயிரிழப்புகள் நிகழ்ந்திருக்கலாம் என்று கூறப்படுகிறது. இத்தகைய கோரச் சம்பவம், உலக நாடுகள் அனைவரது மத்தியிலும், கடும் சோகத்தை அளித்துள்ளது.
இவ்வாறு இருக்க, முன்னாள் ஆபாச பட நடிகை மியா கலிபா, பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த பதிவில், நீங்கள் இந்த சம்பவத்தை பார்த்துக் கொண்டிருந்தால், பாலிஸ்தீனியர்களுக்கு ஆதரவான நிலைப்பாட்டில் இருந்திருக்க வேண்டும்.
அவ்வாறு இல்லாமல் இருந்தால், நீங்கள் தவறான பக்கத்தில் நிற்கிறீர்கள். இதனை வரலாறு உங்களுக்கு ஒருநாள் காட்டும் என்று கூறியிருந்தார். இதுமட்டுமின்றி, பாலிஸ்தானியர்கள் விடுதலை போராட்ட வீரர்கள் என்றும் அவர் தனது பதிவில் கூறியிருந்தார்.
இதனை அறிந்த நெட்டிசன்கள், அவரது அந்த பதிவுக்கு தங்களது கண்டனங்களை கூறி வந்தனர். ஒரு கட்டத்தில், இந்த பதிவு பரபரப்பை ஏற்படுத்தியதை உணர்ந்த மியா கலீஃபா, மீண்டும் இன்னொரு பதிவை வெளியிட்டிருந்தார்.
அதில், நான் வன்முறையை தூண்டும் விதத்தில் எந்தவொரு பதிவையும் வெளியிடவில்லை. நான் பாலிஸ்தீனிய குடிமக்களை தான் விடுதலை போராட்ட வீரர்கள் என்று கூறினேன் என்று தெரிவித்தார்.
இவர் என்னதான் பல விளக்கங்களை கூறியிருந்தாலும், மோசமான சர்ச்சை கருத்தை கூறியதற்காக, கனடா நாட்டில் கலந்துக் கொள்ள இருந்த பிரபல ரேடியோ ஷோவில் இருந்து மியா கலிஃபா தற்போது நீக்கப்பட்டுள்ளார்.