லியோ படத்திற்கு பிறகு, வெங்கட் பிரபு இயக்கும் படத்தில், விஜய் நடிக்க உள்ளார்.
தளபதி 68 என்று தற்காலிகமாக அழைக்கப்படும் இந்த திரைப்படத்தில், மீனாட்சி சௌத்ரி, சினேகா, மைக் மோகன், பிரசாந்த் என்று நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளது.
இந்நிலையில், இந்த திரைப்படத்தில் நடித்துள்ள நடிகர் மைக் மோகன், செய்தியாளர்களை சமீபத்தில் சந்தித்தார்.
அப்போது பேசிய அவரிடம், தளபதி 68 படத்தின் அப்டேட் குறித்து கேட்கப்பட்டது. அதற்கு, படம் வெளியாகுற வரைக்கும் உங்களால் காத்திருக்க முடியாதா? என்று கோபத்துடன் பதில் அளித்தார்.
மேலும், படத்தின் கதை, லொகேஷன் என்று எல்லாவற்றையும் கேட்பீர்களா? என்றும் கூறினார்.