உலகை அழிவுக்கு கொண்டு செல்லும் முக்கியமான பொருட்களில் ஒன்றாக இருப்பது பிளாஸ்டிக். இந்த பிளாஸ்டிக் மூலம் தயாரிக்கப்படும் பொருட்கள், பல ஆண்டுகள் ஆனாலும், மக்காமல் மண்ணுக்கும், அதில் உள்ள உயிர்களுக்கும் தீங்கு விளைவிக்கும் என்று கூறப்படுகிறது.
இத்தகைய பிளாஸ்டிக் பொருட்கள், நம் அன்றாடம் பயன்படுத்தும் பொருட்களாக மாறி, மனித குலத்திற்கே பெரும் அச்சுறுத்தல்களை கொடுத்து வருகிறது. இந்நிலையில், அமெரிக்காவில் உள்ள நியூ மெக்சிகோ பல்கலைக்கழகத்தின் ஆராய்ச்சியாளர்கள் தலைமையில், புதிய ஆராய்ச்சி ஒன்று நடத்தப்பட்டுள்ளது.
அந்த ஆராய்ச்சியில், நாய்கள் மற்றும் மனிதனின் விறைப்பையில் உள்ள நுன்னிய பிளாஸ்டிக் துகள்கள் குறித்தும், அது விந்தனுக்களின் எண்ணிக்கையோடு எந்த வகையில் தொடர்பு கொண்டு உள்ளது என்றும், ஆராயப்பட்டுள்ளது.
இந்த ஆராய்ச்சியில், 23 மனிதர்களும், 47 விலங்குகளின் விறைப்பைகள் ஆராயப்பட்டுள்ளது. இதன் முடிவுகள், டாக்ஸிகாலோஜிகல் சைன்ஸ் ஜார்னல் என்ற ஆராய்ச்சி இதழில், கடந்த 15-ஆம் தேதி அன்று வெளியாகியுள்ளன.
அந்த கட்டூரையில், ஆண்களின் விறைப்பையில் நுன்னிய பிளாஸ்டிக் துகள்கள் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும், இது விந்தனு எண்ணிக்கையை குறைக்கிறது என்றும் கூறப்பட்டுள்ளது.
மேலும், ஆய்வு செய்த அனைத்து மாதிரிகளிலும், நுன்னிய பிளாஸ்டிக் துகள்கள் இருப்பது ஆராய்ச்சியாளர்களை அதிர வைத்துள்ளது. இந்த ஆராய்ச்சிகளை நடத்தியவர்களில் ஒருவரான Xiaozhong Yu, இதுகுறித்து பேசியுள்ளார்.
அதில், “இந்த ஆராய்ச்சியின் ஆரம்பத்தில், நுன்னிய பிளாஸ்டிக் துகள்கள், இனப்பெருக்க மண்டலத்தின் உள்ளே இருக்குமா, என்று சந்தேகம் அடைந்தேன். ஆனால், நாய்களின் ஆய்வு முடிவுகள் வெளியானபோது, நான் ஆச்சரியம் அடைந்தேன். மனிதர்களின் ஆய்வு முடிவுகள் வெளியானபோது, நான் இன்னும் ஆச்சரியம் அடைந்தேன்” என்று கூறினார்.
இந்த ஆய்வு கண்டுபிடித்த வேறு முக்கிய தகவல்கள் என்னென்ன?
நாயின் விறைப்பையை விட ஆணின் விறைப்பையில், 3 மடங்கு அதிகமான பிளாஸ்டிக் செறிவுகள் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. ஒரு கிராம் விறைப்பை மாதிரியில், 330 மைக்ரோ கிராம் பிளாஸ்டிக் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. நாய்களை பொறுத்தவரையில், 123 மைக்ரோகிராம் பிளாஸ்டிக் உள்ளது.
பிளாஸ்டிக் பேக்ஸ், வாட்டர் பாட்டில் தயாரிப்பில் பயன்படுத்தப்படும் பாலித்தின் தான், மனிதனின் விறைப்பையில் மிகவும் பொதுவாக கண்டெடுக்கப்பட்ட பிளாஸ்டிக் நுன் துகள் ஆகும்.
இந்த பிளாஸ்டிக் நுன் துகள்கள், மனிதனின் இனப்பெருக்க மண்டலத்தை பாதிக்கிறது. ஆனால், இதுதொடர்பான ஆய்வுகள் மிகவும் குறைவான அளவிலேயே நடத்தப்பட்டுள்ளது என்றும் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.