மூன்று மாவட்டங்களில் அதி கனமழை பெய்யக்கூடும் என்பதால் இன்று, நாளையும் ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.
மிக்ஜாம் புயல் காரணமாக, வட தமிழக கடலோர மாவட்டங்களில் இன்றும் நாளையும் கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வுமையம் தெரிவித்து இருந்தது.
இந்த நிலையில், ‘மிக்ஜம்’ புயல் எதிரொலியாக சென்னை, செங்கல்பட்டு மற்றும் திருவள்ளூர் ஆகிய 3 மாவட்டங்களுக்கு வானிலை மையம் சார்பில் அதி கனமழைக்கான ‘ரெட் அலர்ட்’ விடுக்கப்பட்டு உள்ளது. மேலும், நாகை, மயிலாடுதுறை, கடலூர், விழுப்புரம், திருவண்ணாமலை, வேலூர், ராணிப்பேட்டை மற்றும் காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களில் இன்று பலத்த காற்றுடன் கனமழை பெய்யும் என்றும் வானிலை மையம் தெரிவித்துள்ளது.