75 வது சுதந்திர திருநாளில், மினி மாராத்தான் ஒட்டம்…!

75வது சுதந்திர தின விழாவையொட்டி, இன்று நாமக்கல் மாவட்டம் குளக்கரைத்திடலில் இருந்து அமுதப் பெருவிழா மற்றும் போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு மினி மாரத்தான் ஓட்டம் நடைபெற்றது. இதனை மாவட்ட வருவாய் துறை அலுவலர் மல்லிகா கொடியசைத்து துவக்கி வைத்தார்.


இந்த விழிப்புணர்வு மினி மாரத்தான் ஓட்டம் குளக்கரைத் திடலில் இருந்து தொடங்கி, மக்கள் பூங்கா சாலை, செலம்ப கவுண்டர் பூங்கா, மகாத்மா காந்தி சிலை, உழவர் சந்தை, நாமக்கல் ஸ்ரீ ஆஞ்சநேயர் கோவில், நாமக்கல் கோட்டை நகராட்சி பள்ளி, சேலம் சாலை ,நேதாஜி சிலை, சுதந்திர நினைவு தூண் ஸ்ரீ.

பலப்பட்டறை மாரியம்மன் கோயில், நாமக்கல் கடைவீதி, நாமக்கல் அறிஞர் அண்ணா பேருந்து நிலையம், நகராட்சி எம்ஜிஆர் நுழைவாயில் வழியாக மீண்டும் பூங்கா சாலை வந்து நாமக்கல் நகராட்சி குளக்கரைத் திடலை வந்து அடைந்தது.

இதில் நாமக்கல் கவிஞர் ராமலிங்கம் பிள்ளை அரசு மகளிர் கல்லூரி,மாணவிகள் மற்றும் நாமக்கல் அறிஞர் அண்ணா அரசு கல்லூரி மாணவ மாணவிகள் மற்றும் பல்வேறு கல்லூரிகளைச் சார்ந்த மாணவ மாணவிகள் கலந்துகொண்டு ஓடினார்கள்.

மேலும், இந்த நிகழ்ச்சியில் நாமக்கல் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் மகேஸ்வரி, நாமக்கல் மாவட்ட செய்தி மற்றும் மக்கள் தொடர்பு துறை அலுவலர் சீனிவாசன், கல்லூரிகளின் முதல்வர்கள், கல்லூரிகளின் பேராசிரியைகள், பேராசிரியர்கள் மாணவ மாணவிகள் என அனைவரும் கலந்து கொண்டு நிகழ்ச்சியை சிறப்பித்தனர்.

RELATED ARTICLES

Recent News