திருவண்ணாமலை அண்ணாமலையார் திருக்கோவில் உலகப் பிரசித்தி பெற்ற விழாவாக கருதப்படும் திருக்கார்த்திகை தீபத்திருவிழா கடந்த 17ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.
திருக்கார்த்திகை தீபத் திருவிழாவிற்கு பல்வேறு மாவட்ட மாநிலங்களில் இருந்தும் வெளிநாடுகளில் இருந்தும் பல லட்சக்கணக்கான பக்தர்கள் இங்கு வருகை தருவார்கள்.
தமிழ்நாடு பொதுப்பணி மற்றும் நெடுஞ்சாலை துறை அமைச்சர் எ.வ.வேலு 14 கிலோ மீட்டர் தொலைவு கொண்ட கிரிவலப் பாதையை தூய்மைப்படுத்தும் பணியில் ஈடுபட்டார். அதனைத் தொடர்ந்து கிரிவலப் பாதையில் உள்ள குப்பைகளையும் பிளாஸ்டிக் கழிவுகளையும் தூய்மை காவலர்களோடு இணைந்து கிரிவலப் பாதை முழுக்க தூய்மயாக்கும் பணியில் முழுமையாக ஈடுபட்டார்.
கிரிவல பாதையை தூய்மைப்படுத்தும் பணியில் நகராட்சி துறை ஊராட்சித் துறை, உள்ளாட்சித் துறை, நெடுஞ்சாலைத்துறை உள்ளிட்ட பல்வேறு துறையினர் தூய்மை பணியில் ஈடுபட்டுள்ளனர்.