அமைச்சர் துரை முருகன் மருத்துவமனையில் அனுமதி

விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி சட்டப்பேரவைத் தொகுதி இடைத்தேர்தல் வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வருகிறது. இதில் திமுக வேட்பாளர் அன்னியூர் சிவா முன்னிலை வகித்து வருகிறார்.

இதனிடையே, திமுக தலைவரும், முதல்வருமான மு.க.ஸ்டாலின் அண்ணா அறிவாலயத்திற்கு வந்து நிர்வாகிகள், தொண்டர்களுக்கு இனிப்புகளை வழங்கி மகிழ்ச்சியை கொண்டாடினார்.

இந்நிலையில் அறிவாலயத்திற்கு வருகை தந்த அமைச்சர் துரைமுருகனுக்கு தீடீர் உடல்நலக்குறைவு ஏற்பட்டது. இதையடுத்து அவருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது.

தொடர் சிகிச்சைக்காக சென்னை அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவசர சிகிச்சைப்பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ள துரைமுருகனுக்கு மருத்துவர்கள் சிகிச்சை அளித்து தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.

RELATED ARTICLES

Recent News