திடீரென மயங்கி விழுந்த நிதின் கட்கரி…மருத்துவமனையில் அனுமதி!

மகாராஷ்டிராவில் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டிருந்த மத்திய சாலை போக்குவரத்து துறை அமைச்சர் நிதின் கட்கரி திடீரென மயங்கி விழுந்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

மகாராஷ்டிரா மாநிலத்தில் மக்களவைத் தேர்தலில் போட்டியிடும் பாஜக வேட்பாளர்களை ஆதரித்து மத்திய சாலை போக்குவரத்து துறை அமைச்சர் நிதின் கட்கரி பிரச்சாரத்தில் ஈடுபட்டிருந்தார்.

மேடையில் பேசிக்கொண்டிருந்த போது, திடீரென நிதின் கட்கரி மயங்கி விழுந்தார். இதனால் கூட்ட மேடையில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. உடனடியாக உடன் இருந்த கட்சி நிர்வாகிகள் அவரை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்து சென்றனர்.

அங்கு அவர் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். தற்போது அவரது உடல்நிலை சீராக உள்ளதாகவும், விரைவில் அவர் உடல் நலம் பெற்று வீடு திரும்புவார் எனவும் மருத்துவர்கள் தெரிவித்தனர்.

RELATED ARTICLES

Recent News