நில அபகரிப்பு தொடர்பான வழக்கில் இருந்து தமிழக உயர்கல்வித் துறை அமைச்சர் பொன்முடியை விடுவித்து சென்னை சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டது.
கடந்த 1996-ஆம் ஆண்டு போக்குவரத்து துறை அமைச்சராக இருந்த பொன்முடி, 3,630 சதுர அடி அரசு நிலத்தை போலி ஆவணம் தயாரித்து பதிவு செய்ததாக குற்றச்சாட்டு எழுந்தது.
இந்த குற்றச்சாட்டை தொடர்ந்து, பொன்முடி உள்பட 10 பேர் மீது லஞ்ச ஒழிப்புத்துறை 2003-ஆம் ஆண்டு வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டது.
இந்த வழக்கை எம்.பி., எம்.எல்.ஏ., வழக்குகளை விசாரிக்கும் சென்னை சிறப்பு நீதிமன்றம் விசாரித்த நிலையில், குற்றச்சாட்டு நிரூபிக்கப்படவில்லை எனக் கூறி அமைச்சர் பொன்முடி உள்ளிட்ட அனைவரையும் விடுவித்து உத்தரவிட்டது.