இலவச பேருந்து குறித்து கேள்வி – செய்தியாளர் சந்திப்பில் கோபம் அடைந்த பொன்முடி!

பொறியியல் மாணவர்களுக்கான இரண்டாம் கட்ட கலந்தாய்வு, சென்னை அண்ணா பல்கலைகழகத்தின் தொழில் நுட்ப கல்வி இயக்குனர் அலுவலகம் எதிரில் நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு ஆய்வு மேற்கொண்ட அமைச்சர் பொன்முடி, பின்னர் செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது, இலவச பேருந்து குறித்து அமைச்சர் பொன்முடி சர்ச்சையாக பேசிய பற்றி கேள்வி கேட்கப்பட்டது. இதற்கு பதில் அளித்த அவர், விளையாட்டிற்காக நான் பேசினேன். அதனை பலர் பெரிதுப்படுத்திவிட்டார்கள் என்று பதில் அளித்தார்.

பின்னர், செய்தியாளர்களின் மற்ற கேள்விகளுக்கு அமைச்சர் பதில் அளித்து வந்தார். கடைசியாக செய்தியாளர் சந்திப்பு முடியும்போது, மற்றொரு ரிப்போர்ட்டர், இலவச பேருந்து குறித்து மீண்டும் கேள்வி எழுப்பினார். இந்த முறை பதில் அளிக்க மறுத்த பொன்முடி, கோபத்துடன் அங்கிருந்து கிளம்பினார். இதனால், அங்கு சிறிது நேரம் சலசலப்பு ஏற்பட்டது.