Connect with us

Raj News Tamil

அமைச்சர் பொன்முடிக்கு 3 ஆண்டு சிறை; 50 லட்சம் அபராதம்: உயர்நீதிமன்றம் அதிரடி!

தமிழகம்

அமைச்சர் பொன்முடிக்கு 3 ஆண்டு சிறை; 50 லட்சம் அபராதம்: உயர்நீதிமன்றம் அதிரடி!

சொத்து குவிப்பு வழக்கில் அமைச்சர் பொன்முடிக்கு 3 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து சென்னை உயர்நீதிமன்றம் அறிவித்துள்ளது.

கடந்த 2006 ஆம் ஆண்டு முதல் 2011 ஆம் ஆண்டு வரை திமுக ஆட்சி காலத்தில் போக்குவரத்து கனிம வளத்துறை அமைச்சராக இருந்தபோது பொன்முடி வருமானத்துக்கு அதிகமாக ரூ.1 கோடியே 75 லட்சம் சொத்துகள் சேர்த்ததாக ஊழல் தடுப்புப் பிரிவு சார்பில் வழக்கு பதிவு செய்யப்பட்டிருந்தது.

இந்த வழக்கை விசாரித்த விழுப்புரம் சிறப்பு நீதிமன்றம், வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட பொன்முடி மற்றும் அவரது மனைவி விசாலாட்சி மீது கூறப்பட்ட குற்றச்சாட்டுகள் ஆதாரங்களுடன் நிரூபிக்கப்படவில்லை எனக் கூறி, இருவரையும் கடந்த 2016-ஆம் ஆண்டு விடுவித்து தீர்ப்பளித்தது.

ஊழல் தடுப்பு பிரிவு இந்தத் தீர்ப்பை எதிர்த்து 2017-ஆம் ஆண்டு மேல் முறையீடு செய்தது.

இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ஜெயச்சந்திரன் புதன்கிழமை (டிச.20) தீர்பளித்தார்.

அதில், வருமானத்துக்கு அதிகமாக ரூ.1.72 கோடி அளவுக்கு அதாவது 64.90% அளவுக்கு அமைச்சர் பொன்முடியும், அவரது மனைவி விசாலாட்சியும் சொத்து குவித்துள்ளதாக ஊழல் தடுப்புத் சட்டத்தின் கீழ் போலீசார் சுமத்தியுள்ள குற்றச்சாட்டுகள் அனைத்தும் நிரூபணம் ஆகியுள்ளன. எனவே, இந்த வழக்கில் இருவரும் குற்றவாளிகள் எனக் குறிப்பிட்டார்.

மேலும், இந்த வழக்கில் தண்டனை விவரங்களை வியாழக்கிழமை காலை 10.30 மணிக்கு அறிவிக்கப்படும் என்று நீதிபதி அறிவித்திருந்தார்.

இந்நிலையில், நீதிபதி ஜெயச்சந்திரன் இன்று காலை தீர்ப்பை வெளியிட்டார்.

சொத்துக்குவிப்பு வழக்கில் அமைச்சர் பொன்முடி மற்றும் அவரது மனைவி விசாலாட்சிக்கும் 3 ஆண்டு சிறை தண்டனையும், 50 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

மேலும், இந்த வழக்கில் அமைச்சர் பொன்முடி மற்றும் மனைவி ஆகியோர் மேல்முறையீடு செய்வதற்கு 30 நாட்கள் தண்டனையை நிறுத்தி வைப்பதாகவும் நீதிபதி தெரிவித்துள்ளார்.

இதன் காரணமாக, அமைச்சர் பொன்முடி எம்எல்ஏவாக பதவி வகிக்கும் தகுதியை இழந்துவிட்டார்.

More in தமிழகம்

To Top