தமிழக உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி அடிக்கடி சர்ச்சையில் சிக்கி வருகிறார். அவருடைய பேச்சு முதல்வர் மு.க. ஸ்டாலினையும் அதிருப்தியில் ஆழ்த்தியது.
இந்நிலையில் விழுப்புரம் மாவட்டம் வானூர் ஊராட்சியில் தூய்மை பணியாளர்களுக்கு பேட்டரி வாகனம் வழங்கும் நிகழச்சியில் அமைச்சர் பொன்முடி கலந்து கொண்டார். இதையடுத்து அவர் பேசுவதற்காக மைக் கேட்டுள்ளார். ஆனால் மைக் வழங்கப்படாமல் இருந்துள்ளது.
இதனால் கோபமடைந்த பொன்முடி, நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்திருந்த திமுக நிர்வாகியை திட்டினார். ஒருகட்டத்தில், “ஏய் லூசு” என வசைபாடினார். இதனால் கூட்டத்தில் சிறிது நேரம் சலசலப்பு ஏற்பட்டது.