நடை பயணத்தால் கால் வலிதான் ஏற்படும்… அண்ணாமலையை விமர்சித்த அமைச்சர் ரகுபதி

பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தமிழ்நாடு முழுவதும் நடை பயணம் மேற்கொள்கிறார். இதனை திமுகவினர் தொடர்ந்து விமர்சனம் செய்து வருகின்றனர்.

இந்நிலையில் தமிழக சட்டத்துறை அமைச்சர் ரகுபதி அண்ணாமலையின் நடைபயணம் குறித்து விமர்சித்துள்ளார். அவர் கூறியதாவது : அண்ணாமலை அரசியல் பண்ணுவதற்காக நடைபயணம் மேற்கொள்கிறார் அவ்வளது தான், இதனால் எந்த விதமான அரசியல் மாற்றமும் ஏற்படாது, அவருக்கு கால் வலி வேண்டுமானால் ஏற்படலாம். மற்றபடி எந்த எழுச்சியும் ஏற்படாது.

அண்ணாமலை ஆளுநரிடம் எத்தனை பட்டியல் வேண்டுமானாலும் கொடுக்கட்டும், எது வந்தாலும் திமுகவும் திமுக அமைச்சர்களும் சந்திக்க தயாராக உள்ளோம், இதுகுறித்து ஏற்கனவே நாங்கள் சொல்லிவிட்டோம் திரும்பத் திரும்ப அது குறித்து சொல்ல வேண்டும் என்ற அவசியமில்லை என கூறினார்.

RELATED ARTICLES

Recent News