ராமநாதபுரத்தில் மாவட்ட திமுக இளைஞர் அணி செயல்வீரர்கள் கூட்டம் இன்று நடைபெற்றது. இதில் பங்கேற்ற அமைச்சர் ஆர்.எஸ். ராஜகண்ணப்பன் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் பாஜக – அதிமுக கூட்டணி பிரிவு என்பது ஒரு நாடகம் என்றும் அதைப்பற்றி எதுவும் சொல்வதற்கு ஒன்றும் இல்லை. அவர்கள் பிரிந்து வந்தாலும், சேர்ந்து வந்தாலும் நாங்கள் சந்திப்பதற்கு தயாராக இருக்கிறோம் என கூறினார்.
முன்னதாக திமுக செயல்வீரர்கள் கூட்டத்தில் சிறப்புரை ஆற்றிய அவர், பிரதமர் மோடி அறிவித்த தேர்தல் வாக்குறுதிகளை 98 சதவிகிதம் நிறைவேற்றவில்லை. இந்தியா கூட்டணியில் மோடியை மிகவும் தீவிரமாக எதிர்க்கக் கூடிய ஒரே தலைவராக தமிழக முதலலமைச்சர் ஸ்டாலின் திகழ்கிறார், இந்தியாவுக்கு தமிழகம் வழிகாட்டியாக திகழ்கிறது.
கட்சியில் உழைப்பவர்களுக்கு திராவிட இயக்கங்களில் குறிப்பாக திமுக வில் உரிய பதவிகள், பொறுப்புகள் கண்டிப்பாக கிடைக்கும். திமுகவில் மு.க. ஸ்டாலின் 55 ஆண்டுகள் கடுமையாக உழைத்ததால்தான் கலைஞர் கருணாநிதிக்கு பிறகு முதலமைச்சர் பதவி கிடைத்தது என கூறினார்.