அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு திடீர் உடல் நலக்குறைவு..மருத்துவமனையில் அனுமதி

சட்டவிரோத பணப்பரிமாற்றம் தொடர்பாக அமைச்சர் செந்தில் பாலாஜியை கடந்த ஜூன் மாதம் அமலாக்கத் துறையினர் கைது செய்தனர்.

சென்னை புழல் மத்திய சிறையில் தண்டனை கைதியாக உள்ள அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு ஏற்கனவே இதய அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ள நிலையில். சிறையில் இருந்தவாறு வீடியோ கான்பரன்சிங் மூலம் நீதிமன்ற வழக்குகளை சந்தித்து வருகிறார்.

இந்நிலையில் இன்று அவருக்கு உடல் நலக் குறைவு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. தற்பொழுது அவரை சிகிச்சைக்காக சிறை மருத்துவமனையில் மருத்துவர்கள் பரிசோதித்தனர். ஆனால் உயர் சிகிச்சைக்காக தற்பொழுது அரசு ஸ்டாண்லி மருத்துவமனைக்கு ஆம்புலன்ஸ் மூலம் அழைத்து சென்றுள்ளனர்.

RELATED ARTICLES

Recent News