தமிழகத்தின் மின்சாரம் மற்றும் மதுவிலக்கு ஆயத்தீர்வைத்துறை அமைச்சராக இருந்து வருபவர் செந்தில் பாலாஜி. இவருக்கு சொந்தமான இடங்களிலும், இவருடைய சகோதரருக்கு சொந்தமான இடங்களிலும், அமலாக்கத்துறை அதிகாரிகள், நேற்று சோதனை நடத்தினர்.
இந்த சோதனையில், பல்வேறு ஆவணங்கள் சிக்கியுள்ளதாகவும், தகவல் பரவி வருகிறது. இந்நிலையில், அமலாக்கத்துறை அதிகாரிகள், இன்று அதிகாலை, அமைச்சர் செந்தில் பாலாஜியை அதிரடியாக கைது செய்துள்ளனர். இதற்கான காரணம் என்னவென்று, இதுவரை தகவல் வெளியாகவில்லை.
இதற்கிடையே, நெஞ்சு வலியால் பாதிக்கப்பட்ட அமைச்சர், சென்னை ஓமந்தூரார் அரசு பன்னோக்கு மருத்துவமனையில், சிகிச்சை பெற்று வருகிறது. மருத்துவமனை தரப்பில் இருந்து அளிக்கப்பட்ட விளக்கத்தில், அவரது உடல்நிலை சீராக உள்ளது என்றும், ஓரிரு நாட்கள் மட்டும் மருத்துவக் கண்காணிப்பு தேவை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், மருத்துவமனையில் செந்தில் பாலாஜி அனுமதிக்கப்பட்டபோது, உயர் ரத்த அழுத்தம் 160/100 ஆக இருந்தது என்றும் மருத்துவமனை விளக்கம் அளித்துள்ளது. இன்னும் விரிவான அறிக்கை, இன்று காலை 9 மணிக்கு மேல் வெளியாகும் என்றும் தற்போது தகவல் கசிந்துள்ளது.