நான் கேட்டது ரஃபேல் வாட்ச்க்கு பில் ஆனால் அண்ணாமலை கொடுத்தது துண்டு சீட்டு என செந்தில் பாலாஜி விமர்சித்துள்ளார்.
அண்ணாமலை கையில் கட்டியுள்ள ரபேல் வாட்ச் பில்லை வெளியிட வேண்டும் என அமைச்சர் செந்தில் பாலாஜி கூறியிருந்தார். இதனையடுத்து ஏப்ரல் 14 ஆம் தேதி ரேபல் வாட்ச்க்கான பில்லை வெளியிட்டார். இதனை தொடர்ந்து திமுக நிர்வாகிகள் 17 பேரின் சொத்து பட்டியலையும் வெளியிட்டார்.
இந்நிலையில் அமைச்சர் செந்தில் பாலாஜி அண்ணாமலையை கடுமையாக விமர்சித்துள்ளார். நான் கேட்டது ரஃபேல் வாட்ச்க்கு பில் ஆனால் அவர் கொடுத்தது துண்டு சீட்டு என விமர்சித்தார். மளிகை கடைக்கு சென்றால் பழைய பேப்பரை எடுத்து பின்பக்கத்தில் எழுதித் தருவார்கள். எனவே அண்ணாமலை கொடுத்தது பில்லா நீங்களே கூறுங்கள் என கேள்வி எழுப்பினார்.
அவர் ஒரு கோமாளி, அவர் செய்தியாளர்களை சந்திக்கும் பொழுது கேள்வி கேட்கக்கூடாது என்று கூறுகிறார். ஒரு பொய் மறைப்பதற்காக ஆயிரம் பொய்கை கூறுகிறார்கள். நாட்டு மக்களை ஏமாற்ற முயற்சிக்கிறார்கள்.ஊழல் பட்டியலை வெளியிடுவேன் என்று சொல்லி சொத்து பட்டியலை வெளியிட்டுள்ளார். குறைந்தபட்ச அறிவு இல்லாமல் வெளியீடு செய்துள்ளார். சொத்துக்கும் ஊழலுக்கு வித்தியாசம் உள்ளது , அதை அண்ணாமலை தெரிந்து கொள்ள வேண்டும் என அமைச்சர் செந்தில் பாலாஜி கூறியுள்ளார்.