அமைச்சர் செந்தில் பாலாஜியின் சகோதரரை கைது செய்யவில்லை – அமலாக்கத்துறை தகவல்

சட்டவிரோத பண பரிவர்த்தனை வழக்கில் அமைச்சர் செந்தில் பாலாஜியை அமலாக்கத்துறை கடந்த மாதம் 14-ம் தேதி கைது செய்யப்பட்டார். இதையடுத்து உடல் நலக்குறைவால் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். சிகிச்சை முடிந்ததும் புழல் சிறையில் அடைக்கப்பட்டார்.

சட்டவிரோத பண பரிவர்த்தனை வழக்கில் அமைச்சர் செந்தில் பாலாஜியின் சகோதரர் அசோக்குமார் மீதும் அமலாக்கத்துறை வழக்குப்பதிவு செய்திருந்தது. அவரை விசாரணைக்கு ஆஜராகும்படி அமலாக்கத்துறை பல முறை நோட்டீஸ் அனுப்பியது. ஆனால், அவர் விசாரணைக்கு ஆஜராகவில்லை.

இதையடுத்து செந்தில் பாலாஜியின் சகோதரர் அசோக் குமாரை கேரள மாநிலம் கொச்சியில் அமலாக்கத்துறை நேற்று கைது செய்ததாக தகவல் வெளியானது. இந்நிலையில் அசோக் குமார் கைது செய்யப்பட்டதாக வெளியான தகவல் தவறானது என அமலாக்கத்துறை தெரிவித்துள்ளது.

4 முறை சம்மன் அனுப்பியும் அசோக் குமார் விசாரணைக்கு இன்னும் ஆஜராகவில்லை. அசோக் குமாரின் மனைவி உள்ளிட்டோரும் பதில் அளிக்கவில்லை. இந்த வழக்கில் 3 பேருக்கு தொடர்பு உள்ளதாக கருதுவதால் அவர்களுக்கும் சம்மன் அனுப்பப்பட்டுள்ளது என அமலாக்கத்துறை தெரிவித்துள்ளது.

RELATED ARTICLES

Recent News