தமிழக சட்டமன்ற கூட்டத் தொடர், இன்று முதல் ஆளுநர் உரையுடன் தொடங்க இருந்தது. ஆனால், தேசிய கீதம் பாட வேண்டும் என்ற கோரிக்கை நிராகரிக்கப்பட்டதால், அதிருப்தி அடைந்த ஆளுநர், சட்டமன்றத்தில் இருந்து வெளியேறினார். இது, பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது.
இந்நிலையில், சட்டமன்ற கூட்டத் தொடர் முடிந்ததையடுத்து, போக்குவரத்துத்துறை அமைச்சர் சிவசங்கர், செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்துள்ளார். அந்த பேட்டியில், ஆளுநர் உரையின் தொடக்கத்தில் தமிழ் தாய் வாழ்த்தும், நிறைவில் தேசிய கீதமும் படுவது தான் மரபு என்று தெரிவித்தார்.
மேலும், தவறான வாதத்தை வைத்து நாடகத்தை அறங்கேற்றிய ஆளுநர், தமிழக மக்களிடம் தார்மீக மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும் கூறினார்.
தொடர்ந்து பேசிய அமைச்சர், “முதல்வருக்கோ, தமிழக மக்களுக்கோ தேச பக்தி குறித்து பாடம் எடுக்க வேண்டிய தகுதி ஆளுநருக்கு கிடையாது” என்றும், “ஆளுநர் அவர் தான் தேசிய கீதத்தை அவமதித்து உள்ளார்” என்றும் தெரிவித்தார். மேலும், “ஆளுநர் தனது பதவியை ராஜினாமா செய்ய வேண்டும்” என்றும் சிவசங்கர் கூறினார்.