தமிழ்நாட்டின் நிதி நிலைமை திவாலாக போவதாக, எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிச்சாமி கூறியிருந்தார். இது தமிழக மக்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது. இந்நிலையில், விருதுநகர் மாவட்டத்திற்கு வந்த நிதியமைச்சர் தங்கம் தென்னரசு, செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது பேசிய அவரிடம், பழனிச்சாமியின் குற்றச்சாட்டு குறித்து கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு பதில் அளித்த அவர், இது முற்றிலும் தவறான தகவல் என்றும், அடிப்படை புரிதல் இல்லாமல், பழனிச்சாமி பேசி வருகிறார் என்றும் கூறினார்.
மேலும், தமிழ்நாட்டின் நிதிநிலைமை கட்டுக்குள் தான் உள்ளது என்று கூறிய தங்கம் தென்னரசு, நிதிக்குழு பரிந்துரைத்த அளவை விட குறைவாகவே, தமிழக அரசு கடன் வாங்கியுள்ளது என்று கூறினார்.