திராவிடம் என்ற சொல் பிரிவினையை ஏற்படுத்துவதாக நேற்று ஆளுநர் பேசியதற்கு பதிலளிக்கும் விதமாக அமைச்சர் தங்கம் தென்னரசு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அவர் வெளியிட்ட அறிக்கையில் ஆளுநர் ரவியின் அன்றாட புலம்பல்களை பற்றி எங்களுக்கு கவலையில்லை. தமிழக சட்டமன்றத்தில் நிறைவேற்றப்படும் சட்ட மசோதாகளுக்கு ஒப்புதல் அளிக்காமல், அனைத்து சட்ட விரோத செயல்களையும் ஆளுநர் ரவி செய்து கொண்டிருக்கிறார்.
திராவிட இயக்கத்தின் கொள்ளைகள் தமிழக மக்களின் மனதில் பட்டை தீட்டப்பட்ட வைரமாக மின்னுவதற்கு நாள்தோறும் தொண்டாற்றி வரும் ஆளுநருக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்” எனஅமைச்சர் தங்கள் தென்னரசு தெரிவித்துள்ளார்.