தமிழ்நாடு நகர்ப்புற மேம்பாட்டு நல சங்கம் சார்பாக சென்னை சேப்பாக்கம் திருவல்லிக்கேணி, புளியந்தோப்பு, வில்லிவாக்கம் கீழ்ப்பாக்கம் நுங்கம்பாக்கம் மற்றும் மந்தவெளி ஆகிய ஆறு தொகுதிகளில் 3033 வீடுகள் கட்டுவதற்கான அடிக்கல் நாட்டினர். இந்த நிகழ்ச்சியில் சென்னை மாநகராட்சி மேயர் பிரியா, அமைச்சர் சேகர் பாபு, த.மோ அன்பரசன், ஆகியோர் பங்கேற்றனர்.
அதன் ஒரு பகுதியாக, சென்னை சிந்தாதிரிப்பேட்டை தொகுதிக்குட்பட்ட நால்வர் நெடுஞ்செழியன் நகர் திட்டப்பகுதியில் 450 புதிய குடியிருப்புகளுக்கு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இன்று அடிக்கல் நாட்டிய பின் மேடையில் உரையாற்றினார்….
அப்போது பேசிய அவர்: இந்தத் தொகுதியில் இன்று 443 சதுர அடியில் 450 வீடுகள் கட்டுவதற்கான அடிக்கல் நாட்டப்பட்டுள்ளது. இந்த பணிகள் 15 மாதத்திற்குள் நிறைவு பெற்று புதிய வீடுகள் உங்களுக்கு வழங்கப்படும் என்றார்.
திமுக அரசு தொடர்ந்து மகளிர்களுக்கு பல்வேறு திட்டங்களை தொடர்ச்சியாக செய்து வருகிறது. அந்த வகையில் புதிதாக கட்டிக் கொடுக்கப்படும் இந்த வீடுகள் மூலமாக House wife என்று இருந்த மகளிரை House Owner ராக மாற்றி இருக்கிறோம் என கூறினார். மேலும் சொந்த வீட்டை எப்படி பராமரிப்பீர்களோ அதுபோல நாங்கள் கட்டிக் கொடுக்கும் இந்த வீடுகளையும் பராமரிக்க வேண்டும் என்று பொதுமக்களிடம் கோரிக்கை வைத்தார். அதேபோல தனியார் அடுக்குமாடி குடியிருப்புகளில் உள்ளது போல குடியிருப்போர் நல சங்கம் அமைக்க வேண்டும் என்றும் தெரிவித்தார்.