சொத்துக் குவிப்பு வழக்கில் பொன்முடிக்கு சிறைத் தண்டனை விதிக்கப்பட்டதால் அவர் அமைச்சர் பதவியையும், எம்எல்ஏ பதவியையும் இழந்தார்.
இந்நிலையில், பொன்முடி வகித்து வந்த உயர் கல்வித் துறை மற்றும் அறிவியல் தொழில்நுட்ப துறைகைளை இனி அமைச்சர் ராஜகண்ணப்பனுக்கு ஒதுக்கீடு செய்யக் கோரி ஆளுநருக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம் அனுப்பியிருந்தார்.
இதையடுத்து, பொன்முடி வகித்து வந்த துறைகளை அமைச்சர் ராஜகண்ணப்பனுக்கு ஒதுக்கீடு செய்ய ஆளுநர் ஆர்.என்.ரவி ஒப்புதல் அளித்தார்.
மேலும், அமைச்சர் ராஜகண்ணப்பன் வசம் இருந்த கதர், கிராமத்தொழில் துறை, அமைச்சர் ஆர்.காந்திக்கு கூடுதல் பொறுப்பாக வழங்கவும் ஆளுநர் ஒப்புதல் அளித்துள்ளார்.