மினுக்கி மினுக்கி மேனா மினுக்கி.. வெளியானது தங்கலான் ஃபர்ஸ்ட் சிங்கிள்!

வித்தியாசமான கதைக் களங்களை தொடர்ச்சியாக இயக்கி வருபவர் இயக்குநர் பா.ரஞ்சித். இவர், தற்போது தங்கலான் என்ற படத்தை இயக்கி முடித்துள்ளார்.

கோலார் தங்க சுரங்கத்தை மையமாக வைத்து உருவாகியுள்ள இப்படத்திற்கு, ஜி.வி.பிரகாஷ் இசையமைத்துள்ளார். இப்படத்தின் முதல் சிங்கிள் இன்று வெளியாகும் என்று, நேற்றே படக்குழுவினர் அறிவித்தனர்.

அதன்படி, தற்போது மினுக்கி மினுக்கி என்ற பாடல், YouTube பக்கத்தில் ரிலீஸ் ஆகியுள்ளது. உமா தேவி எழுதியுள்ள இந்த பாடலுக்கு, சேண்டி மாஸ்டர் தான் நடனம் அமைத்துள்ளார்.

ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ள இப்பாடல், படத்தின் மீதான எதிர்பார்ப்பை அடுத்த கட்டத்திற்கு எடுத்து சென்றுள்ளது.

RELATED ARTICLES

Recent News