பிரபஞ்ச அழகி போட்டி: பட்டத்தை தட்டி சென்ற டென்மார்க் இளம் பெண்!

மெக்சிகோவில் நடைபெற்ற பிரபஞ்ச அழகி போட்டியில் டென்மார்க் விக்டோரியா கிஜேர் பட்டத்தை கைப்பற்றினார்.

மெக்சிகோவில் 73-வது பிரபஞ்ச அழகி போட்டி நடைபெற்றது. இதில் 2024 ஆம் ஆண்டுக்கான பிரபஞ்ச அழகி பட்டத்தை டென்மார்க் நாட்டை சேர்ந்த 21 வயதான விக்டோரியா கிஜேர் கைப்பற்றினார்.

இதன் மூலம் பிரபஞ்ச அழகி பட்டத்தை வென்ற முதல் டென்மார்க் பெண்மணி என்ற பெருமையை அவர் பெற்றார்.

மேலும், மெக்சிகோவின் மரியா பெர்னாண்டா பெல்ட்ரான் முதல் ரன்னர்-அப் ஆகவும், நைஜீரியாவின் சினிடிம்மா அடெட்ஷினா இரண்டாவது ரன்னர்-அப் இடத்தையும் பிடித்தனர்.

மிஸ் யுனிவர்ஸ் இந்தியா 2024 பட்டம் வென்ற 19 வயதான ரியா சிங்கா, இந்தியா சார்பில் பிரபஞ்ச அழகி போட்டியில் கலந்து கொண்டார்.

ஆரம்ப சுற்றுகளில் ரியா சிங்கா அசத்தினாலும் முதல் 12 இடங்களை பிடிக்க முடியாததால் இறுதிசுற்றுக்கு முன்னேற முடியாமல் வெளியேறினார்.

இப்போட்டியில் முதல் 12 இடங்களை பெற்ற இறுதிப் போட்டியாளர்களில் 7 பேர் லத்தீன் அமெரிக்காவைச் சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

RELATED ARTICLES

Recent News