வண்டலூர் அருகே காணாமால் போன மூன்று வயது சிறுவன் கால்வாயில் சடலமாக மீட்கபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை வண்டலூர் அடுத்த ஆதனூர் விவேகானந்தா நகர் பகுதியை சேர்ந்தவர் விமல்ராஜ் ஜே.சி.பி ஓட்டுனராக வேலை பார்த்து வருகிறார்.
இவருடைய இளைய மகன் டானியல் ஜான் (3) நேற்று வீட்டின் அருகே விளையாடி கொண்டிருந்த சிறுவன் திடிரென மாலை முதல் காணததால் குடும்பத்தினர் பல இடங்களில் தேடி பார்த்தும் கிடைக்காததால் வீட்டின் அருகே உள்ள கால்வாயில் பார்த்த போது சிறுவன் சடலமாக மிதப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தனர்.
தகவல் அறிந்து வந்த ஓட்டேரி போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரனை நடத்தியதில் தினமும் தனது தாத்தாவுடன் அப்பகுதியில் மீன் பிடிக்க செல்வார் என்று அந்த வகையில் தவறி விழுந்து உயிரிழந்திருக்கலாம் என்று தெரிவித்தனர்.