காணாமல் போன பெண் குழந்தைகள்…முதல் இடத்தில் எந்த மாநிலம் தெரியுமா??

நாட்டில் காணாமல் போன பெண் குழந்தைகளின் எண்ணிக்கை குறித்து தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. அதன் படி முதல் மூன்று இடங்களில் மத்திய பிரதேசம், மேற்குவங்கம், கர்நாடகம் ஆகிய மாநிலங்கள் இடம்பெற்றுள்ளது.

2018 ஜனவரி 1 முதல் 2023 ஜூன் 30 வரை 2,75,125 குழந்தைகள் காணாமல் போயுள்ளனர். அவர்களில் 62,237 பேர் ஆண் குழந்தைகள், 2,12,825 பேர் பெண் குழந்தைகள்.

முதல் இடத்தில் உள்ள மத்திய பிரதேச மாநிலத்தில் 49,024 பெண் குழந்தைகள் உள்பட 61,102 குழந்தைகளைக் காணவில்லை. மேற்குவங்கத்தில் 41,808 பெண் குழந்தைகள் உள்பட 49,129 பேரும், கர்நாடகத்தில் 18,893 பெண் குழந்தைகள் உள்பட 27,528 குழந்தைகளும் காணாமல் போயுள்ளனர்.

லட்சத்தீவு, மிசோரம் மாநிலங்களில் குழந்தைகள் காணாமல் போனது குறித்த வழக்குகள் ஏதும் இல்லை.

RELATED ARTICLES

Recent News