ராஜஸ்தான், மத்தியப் பிரதேசம், தெலுங்கானா, சத்தீஷ்கார் மற்றும் மிசோரம் ஆகிய ஐந்து மாநில சட்டப்பேரவைத் தேர்தலுக்கான கருத்துக் கணிப்பு முடிவுகள் வெளியாகி உள்ளது.
இந்நிலையில் மிசோரம் மாநிலத்தில் மொத்தமுள்ள 40 தொகுதிகளில் சோரம் மக்கள் இயக்கம் (ZPM) 15-25 இடங்களை கைப்பற்றும் என ஜன் கீ பாத் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
மிசோ தேசிய முன்னணி (MNF) 10-14 இடங்களும் காங்கிரஸ் 5-9 இடங்களும் பாஜக 0-2 இடங்களை பிடிக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.