Connect with us

Raj News Tamil

காவி நிறத்தில் மாற்றப்பட்ட தூர்தர்ஷன் லோகோ…முதலமைச்சர் ஸ்டாலின் கண்டனம்

தமிழகம்

காவி நிறத்தில் மாற்றப்பட்ட தூர்தர்ஷன் லோகோ…முதலமைச்சர் ஸ்டாலின் கண்டனம்

இந்திய அரசின் அதிகாரப்பூர்வ செய்தி ஒளிபரப்பு நிறுவனம் தான் தூர்தர்ஷன். இந்தியாவில் உள்ள பல்வேறு பிராந்திய மொழிகளில், இந்த செய்தி தொலைக்காட்சி செயல்பட்டு வருகிறது.

நேற்று இந்நிறுவனத்தின் எக்ஸ் தளப் பக்கத்தில், தங்களது பழைய லோகோவை நீக்கிவிட்டு, காவி நிறத்திலான புதிய லோகோவை டிடி வெளியிட்டிருந்தது. இந்த அறிவிப்பு வெளியான சில மணி நேரங்களிலேயே, பலரிடம் இருந்து எதிர்ப்பு அலைகள் எழுந்த வண்ணம் உள்ளன.

இந்நிலையில் தமிழக முதலவர் மு.க ஸ்டாலின் தனது எக்ஸ் தளப் பக்கத்தில் கண்டனம் தெரிவித்துள்ளார். அதில் கூறியதாவது : உலகப் பொதுமறை தந்த வள்ளுவருக்குக் காவிச்சாயம் பூசினார்கள்; தமிழ்நாட்டின் ஆளுமைகளின் சிலைகள் மீது காவி பெயிண்ட் ஊற்றி அவமானப்படுத்தினார்கள்; வானொலி என்ற தூய தமிழ்ப் பெயரை ஆகாஷவாணி என சமஸ்கிருதமயமாக்கினார்கள்;

பொதிகை என்ற அழகிய தமிழ்ச் சொல்லையும் நீக்கினார்கள். தற்போது Doordarshan இலச்சினையிலும் காவிக்கறையை அடித்திருக்கிறார்கள்.

தேர்தல் பரப்புரையில் நாம் சொன்னதுபோன்றே, அனைத்தையும் காவிமயமாக்கும் பாஜக சதித்திட்டத்தின் முன்னோட்டம்தான் இவை. இந்த ஒற்றைவாத பாசிசத்துக்கு எதிராக இந்திய மக்கள் வெகுண்டெழுவதை 2024 தேர்தல் முடிவுகள் உணர்த்தும் என அவர் கூறியுள்ளார்.

Continue Reading
Advertisement
You may also like...

More in தமிழகம்

To Top