ஈரோடு இடைத்தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளர் ஈவிகேஎஸ் இளங்கோவன் 53 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வாக்குகள் பெற்று முன்னிலையில் உள்ளார்.
இதனையடுத்து சென்னை அண்ணா அறிவாலயத்திற்கு வந்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்க்கு தொண்டர்கள் உற்சாக வரவேற்பு கொடுத்தனர். இதையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், ஈ வி கே எஸ் இளங்கோவனுக்கு மகத்தான வெற்றியை கொடுத்த ஈரோடு கிழக்கு தொகுதி மக்களுக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். 20 மாத கால ஆட்சிக்கு மக்கள் அங்கீகாரம் கொடுத்துள்ளனர்.
இடைத்தேர்தல் பிரச்சாரத்தில் எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிச்சாமி தன்னை மறந்து நாளாந்தர பேச்சாளராக பேசி உள்ளார். இதற்கு மக்கள் தக்க பாடத்தை வழங்கியுள்ளனர். இந்த தேர்தலில் தீவிரமாக பணியாற்றிய அமைச்சர்கள், எம்பிக்கள், எம்எல்ஏக்கள் அனைவருக்கும் நன்றி தெரிவித்துக்கொள்வதாக கூறினார்.