அனைத்து துறைகளிலும் முத்திரை பதித்தவர் கலைஞர் – முதல்வர் ஸ்டாலின் பேச்சு

மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியின் நூற்றாண்டு விழாவின் தொடக்கமாக சென்னை கலைவாணர் அரங்கில் இன்று விழா நடைபெற்றது. இந்த விழாவில் முதலமைச்சர் மு.க ஸ்டாலின் உரையாற்றினார்.

அவர் பேசியதாவது: நாளை கலைஞரின் பிறந்தநாள் என்பதை விட தமிழ் சமுதாயம் உதயமான நாள் என்று கூறவேண்டும். அனைத்து துறைகளிலும் முத்திரை பதித்தவர் கலைஞர். மக்களோடு மக்களாக இருந்ததால் இன்றும் மக்கள் மனதில் வாழ்கிறார்.

கலைஞர் தமிழ் சமுதாயத்துக்கு செய்த சாதனைகளாக கலைஞர் நூற்றாண்டு கொண்டாடப்படுகிறது. தொழில் நிறுவனங்கள் சென்னையில் வளர காரணமாக இருந்தவர் கலைஞர். அதன்படி தொழிற் புரட்சி ஏற்படுத்தும் வகையில் சிங்கப்பூர் ஜப்பான் பயணத்தில் 3230 கோடி மதிப்பீட்டிலான தொழில் முதலீட்டு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகி இருக்கிறது.

ஜனவரி மாத உலக முதலீட்டாளர் மாநாட்டை நடத்த உள்ளோம். கலைஞர் என்பவர் உலக தமிழர்களின் சொத்து.1997ம் ஆண்டு டைடல் பார்க்கை தொடங்கி தகவல் தொழில்நுட்ப துறையை உருவாக்கி நவீன தமிழ்நாட்டை உருவாக்கினார்.

தலைநகரம் சென்னையில் உலக தரம் வாய்ந்த பன்னாட்டு்அரங்கம் உருவாக்கப்படும். உலகளாவிய கலைஞர் கன்வென்சன் சென்டர் அமையும்.

சென்னை நந்தம்பாக்கத்தில் 25 ஏக்கர் பரப்பளவில் 10 ஆயிரம் பேர் அமரும் வகையில் பிரமாண்டமாக உலக தரத்தில் கலைஞர் கன்வென்சன் சென்டர் அமைக்கப்படும் என அவர் பேசினார்.

RELATED ARTICLES

Recent News