மிகஜம் புயலால் பெய்த பெருமழையால் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்துள்ளது. குறிப்பாக, வேளச்சேரி, பள்ளிக்கரணை, கிழக்கு கடற்கறை சாலையிலுள்ள பெரும்பாலான பகுதிகளில் இன்னும் வெள்ள நீர் வடியவில்லை.
இந்நிலையில் வேளச்சேரி, தரமணி சாலையில் ஏற்பட்ட வெள்ள பாதிப்புகளை பார்வையிடுவதற்காக அத்தொகுதி காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினரான ஹசன் மவுலானா சென்றுள்ளார். அப்பகுதி சேர்ந்த பெண் ஒருவர், தங்கள் பகுதியில் வெள்ள நிவாரணப் பகுதிகள் எதுவும் மேற்கொள்ளப்படவில்லை என்று கூறி அவரை தடுத்தி நிறுத்தினார்.
இதனையடுத்து அப்பகுதியில் இருந்த பலரும் ஹசன் மவுலானாவை முற்றுகையிட்டு கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. நிலைமையை சமாளிக்க முடியாத ஹசன் மவுலானா, சிறிது நேரத்தில் அங்கிருந்து கிளம்பிச் சென்றார். இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.