பொது இடங்களில் மொபைலுக்கு சார்ஜ் போட போறீங்களா?? உங்களுக்கான எச்சரிக்கை பதிவு

தொழில்நுட்பங்கள் எவ்வளவு வேகமாக வளருகிறதோ, அதேபோல அதை பயன்படுத்தி செய்யப்படும் மோசடிகளும் அசுர வேகத்தில் வளர்ந்து கொண்டிருக்கின்றன. தற்போது அனைவரின் கைகளிலும் ஸ்மார்ட் போன் வந்துவிட்டதால் ஒருவரின் ஸ்மார்ட்போனை ஹேக் செய்துவிட்டாலே, அவரது தனிப்பட்ட விவரங்களை திருடுவது அதிகரித்துள்ளது.

ரயில் நிலையங்கள், பஸ் நிலையங்கள், விமான நிலையங்கள் உள்ளிட்ட பொது இடங்களில் சார்ஜிங் பாயிண்டுகள் (Charging Points) வந்துவிட்டன. அதில் பல போன்களுக்கான USB வயர்கள் அதில் இருக்கும்.

இந்நிலையில், இந்த சார்ஜிங் பாயிண்ட்டுகளில் உள்ள யுஎஸ்பி வயர்கள் மூலம் நமது செல்போனில் உள்ள அனைத்து தரவுகளும், விவரங்களும் மோசடி கும்பல்களால் பதிவிறக்கம் செய்யப்படுவதாக மத்திய தகவல் மற்றும் தொழில்நுட்பத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. இதன் மூலம் அவர்களின் வங்கிக்கணக்கில் உள்ள பணம் திருடப்பட்டு வருவதாக அது கூறியுள்ளது.

இதனால் பொது இடங்களில் உள்ள சார்ஜிங் பாயிண்டுகளில் வேறு யுஎஸ்பி வயர்கள் மூலம் சார்ஜ் போட வேண்டாம் என மத்திய தகவல் மற்றும் தொழில்நுட்பத்துறை அமைச்சகம் எச்சரித்துள்ளது. இந்த மோசடிக்கு ‘ஜூஸ் ஜேக்கிங்’ (Juice Jacking) என சைபர் க்ரைம் போலீஸார் பெயரிட்டுள்ளனர்.

RELATED ARTICLES

Recent News