திருப்பூர் அருகே, மாணவிகள் அரசியல் தெளிவு பெற வேண்டும் என்பதற்காக, அரசு பள்ளியில் ‘மாதிரி தேர்தல்’ நடத்தப்பட்டுள்ளது.
திருப்பூர் மாவட்டம் புது ராமகிருஷ்ணபுரம் பகுதியில் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில், ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவிகள் படித்து வருகின்றனர்.
இந்நிலையில், தேர்தல் தொடர்பான விழிப்புணர்வு, மாணவிகள் மத்தியில் ஏற்பட வேண்டும் என்பதற்காக, இந்த பள்ளியில் ‘மாதிரி தேர்தல்’ நடத்தப்பட்டுள்ளது.
இதுகுறித்து பேசிய மாணவிகள், இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சியின் மூலம், தேர்தல் நடைபெறும் விதம் குறித்து அறிந்துக் கொண்டதாகவும், இந்த வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுத்த ஆசிரியர்களுக்கு நன்றி என்றும் தெரிவித்தனர்.