சாலை பாதுகாப்பு வாரத்தை முன்னிட்டு சென்னை முழுவதும் கடந்த 11 ஆம் தேதி முதல் போக்குவரத்து போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபட்டு வருகிறார்கள். இந்த நிலையில் சென்னை வேப்பேரியில் உள்ள போக்குவரத்து காவல் ஆய்வாளர் பாண்டிவேலு தலைமையிலான போலீசார் நூதன முறையில் விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறார்கள்.
அதாவது சாலை விதிகளை கடைபிடிப்பவர்களுக்கு பூங்கொத்துக்கள் கொடுத்தும், சாலை விதிமுறைகளை மீறிபவர்களுக்கு உடனடியாக அபராதம் விதித்து வருகிறார்கள்.
குறிப்பாக இருசக்கர வாகனத்தில் பயணிக்கும் இரண்டு நபர்களும் தலைகாவசத்துடன் சென்றால் அவர்களை நிறுத்தி அவர்களுக்கு பூங்கொத்து கொடுத்தும், அதே போன்று காரில் சீட் பெல்ட் அணிந்து வருபவர்களும், ஆட்டோவில் சீருடை அணிந்து வருபவர்களுக்கும் உற்சாகத்தை ஏற்படுத்தும் வகையில் பூங்கொத்து கொடுத்தும் பொங்கல் வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார். மேலும் சாலை விதிமுறைகளை மீறுபவர்களிடம், போக்குவரத்து விதிமுறைகளை பற்றி அறிவுரை வழங்கிய பின் அபராத தொகையும் விதித்து வருகின்றனர்.