முத்துராமலிங்கத்தேவர் குருபூஜை தமிழில் வாழ்த்து சொன்ன மோடி..!

தமிழகம் முழுவதும் முத்துராமலிங்கத்தேவர் குருபூஜை கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. மேலும் அவர் பிறந்த இடமான பசும்பொன்னில் பொதுமக்கள், அரசியல் கட்சித்தலைவர்கள் என பல்வேறு தரப்பினர் குருபூஜையில் கலந்து வருகின்றனர்.

அந்த வகையில் பிரதமர் மோடி, சமூக மேம்பாடு, விவசாயிகள் நலன், வறுமை ஒழிப்பு உட்பட தேசத்திற்காக அவர் ஆற்றிய தலைசிறந்த பங்களிப்பை நினைவு கூர்கிறேன். அவரது கொள்கைகள் நம்மை தொடர்ந்து ஊக்குவிக்கும் என தனது டிவிட்டர் பக்கத்தில் வாழ்த்து கூறியுள்ளார். மேலும் இவர் தேவர் குருபூஜைக்கு வருவதாக அண்மையில் வதந்தி பரவியது குறிப்பிடத்தக்கது.