பிரதமர் மோடி இரண்டு நாள் பயணமாக ரஷ்யாவுக்கு சென்றுள்ளார். அங்கு ரஷ்ய அதிபர் புதினை சந்தித்து பேசினார். இருவரும் பரஸ்பரம் தங்களது நட்பினை வெளிப்படுத்தினார். அப்போது ஒருவரை ஒருவர் கட்டியணைத்துக் கொண்டனர்.
இந்த நிகழ்வு குறித்து தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள உக்ரைன் அதிபர் வொலோதிமீர் ஸெலென்ஸ்கி,
உக்ரைனில் இன்று ரஷியாவின் ஏவுணைத் தாக்குதல் காரணமாக 13 குழந்தைகள் உள்பட 37 பேர் கொல்லப்பட்டுள்ளனர். இளவயது புற்றுநோயாளிகள் இருக்கும் குழந்தைகளுக்கான மருத்துவமனையை குறிவைத்து ரஷிய ஏவுகணைத் தாக்கியுள்ளது. பலரும் இடிபாடுகளில் சிக்கியுள்ளனர்.
இந்த நேரத்தில் உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாட்டின் தலைவர் ஒருவர் மாஸ்கோவில் உலகின் மிக மோசமான குற்றவாளியைக் கட்டிபிடித்தது மிகவும் ஏமாற்றமாகவும், அமைதியின் மீது விழுந்த அடியைப் போலவும் இருக்கின்றது. என்று புதினுடனான மோடியின் சந்திப்பு குறித்து பதிவிட்டுள்ளார்.