தனி விமானம் மூலம் இந்தோனேசியா செல்கிறார் மோடி..!

17-வது ஜி-20 மாநாடு இந்தோனேசிய பாலி நகரத்தில் நடைபெற இருக்கிறது. இந்த மாநாட்டில் உலக நாடுகளின் தலைவர்கள் பல்வேறு பிரச்சனைகள் குறித்து கலந்து ஆலோசிக்க உள்ளனர். குறிப்பாக சுகாதாரம், டிஜிட்டல் பரிமாற்றம் மற்றும் சுகாதாரம் ஆகிய மூன்று தலைப்புகளின் கீழ் விவாதிக்கின்றனர். இதில் பங்கேற்பதற்காக பிரதமர் நரேந்திர மோடி தனி விமானம் மூலம் இன்று இந்தோனேசியா புறப்படுகிறார்.

இந்தாண்டு ஜி-20 நாடுகள் குழுவின் தலைவர் பதவியை இந்தியா ஏற்கும் நிலையில், மரபுப்படி இந்தோனேசிய அதிபர், மோடியிடம் வழங்குகிறார். இதனால் அடுத்த 2023-ஆம் ஆண்டு இந்தியாவில் ஜி20 நாடுகளின் மாநாடுகள் நடைபெரும் என எதிர்பார்க்கப்படுகிறது. அண்மையில் ஜி20 லோகோவில் தாமரை சேர்க்கப்பட்டது பெரும் சர்ச்சை கிளப்பியது குறிப்பிடத்தக்கது.

RELATED ARTICLES

Recent News